மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு ,நீங்கள் எதிர்கொள்ளும் சவாலானது உங்கள் ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, நிகழ்ச்சி தொடர வேண்டும் என கூறிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.குஷ்பு தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் சினிமாவில் தழிழ் மொழியே தெரியாமல் சின்னத்தம்பி படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே மக்கள் மத்தில் அமுாக வரவேற்பு பெற்றார்.
இந்தப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.சினிமாவை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C யை திருமணம் செய்துகொண்டார். தற்போது அரசியல், பொது வாழ்க்கை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும்
நிகழ்வொன்றில் பங்கேற்று மேடையில் நடனமாடிய போது முட்டிக்காலில் அவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை காரணமாக மேடையில் தவறி விழுந்துள்ளார்.ஆனால் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து அதே எனர்ஜியுடன் நடனமாடி அச்தியுள்ளார். இவரின் இந்த சால்களை அசால்ட்டாக கையாளும் குணத்துக்கு இணையத்தில் லைக்குகள் மற்றும் நேர்மறையான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
View this post on Instagram