தமிழில் தடம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்மிருதி வெங்கட்.கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். மௌன வலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு தடம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த இரண்டாவது திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், முதல் திரைப்படம் இதுவரை வெளிவரவே இல்லை. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும் விதமாக இருந்தது. இதனை தொடர்ந்து தீர்ப்புகள் விற்கப்படலாம் அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இவர் நடித்த படங்களில் எல்லாமே துணை கதாபாத்திரங்களிலும் கதைக்க வலு சேர்க்கக்கூடிய கதாபாத்திரங்களுமாகவே இருந்தன. ஆனால் முழு நேர முழுமையான ஹீரோயினாக இவர் எந்த படத்திலும் நடித்ததில்லை. அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் ஜே பாலாஜியின் தங்கை வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்த ஸ்மிருதிக்கு மன்மதலீலை வேடத்தில் கிளாமரான வேடத்தைக் கொடுத்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. ஆனால் அந்த படம் சொதப்பியதால் ஸ்மிருதியின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.இதையடுத்து சமீபத்தில் ரிலீஸ் ஆன வதந்தி வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் அந்த தொடரில் நல்ல கவனத்தைப் பெற்றது.இந்நிலையில் இப்போது இவரின் சமூகவலைதளப் பக்கத்தை ரசிகர்கள் மொய்க்க தொடங்கியுள்ளனர். அதற்குக் காரணம் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள்தான்.