பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை…! வைரலாகும் பரபரப்பு வீடியோ காட்சிகள்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகர் பிரபாஸின் கன்னத்தில் அவருடைய ரசிகை ஒருவர் அறைந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரபல நடிகர் பிரபாஸை பெண் ரசிகை ஒருவர் கன்னத்தில் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார்.

விமான நிலையம் ஒன்றில் பிரபாஸை பார்த்த அவருடைய ரசிகை அவருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரை பார்த்த உற்சாகத்தில் துள்ளி துள்ளி குதித்த அவர் அடுத்த சில நொடிகளில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருடைய கன்னத்தில் லேசாக அரை விட்டபடி சிரித்துக்கொண்டே குவித்து கொடுத்து ஓடி விட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக மாறிய

நடிகர் பிரபாஸ் அதனை தொடர்ந்து எந்த வெற்றி படத்தையும் கொடுக்கவில்லை. பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.தொடர்ந்து தன்னுடைய வெற்றி படத்திற்காக காத்திருக்கும் பிரபாஸ் தற்பொழுது சலார் படத்தின் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *