பிரபல இசையமைப்பாளருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம்…? அவரது தந்தை கூறிய தகவல்…! மாப்பிள்ளை யார் தெரியுமா …?

நடிகை கீர்த்தி சுரேஷ் இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருந்ததே தவிர நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்

என்றும் இருவரின் வீட்டாரும் இது குறித்த பேசி வருகிறார்கள் என்றும் இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியானது.மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் தீயாக பரவியது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் இன்னாரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று எந்த தகவல் வந்தாலுமே அது உண்மைக்கு புறம்பானது.

பொய்யானது.கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் என்றால் அதனை நாங்களே அறிவிப்போம். இணையத்தில் பரவும் தகவலின் படி அனிருத் ரவிச்சந்தர் குடும்பத்தினருடன் நாங்கள் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்தான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *