பிக்பாஸ் ஆர்த்தியின் கணவர் மாயம்…! வலைவீசி தேடும் பொலிசார்: காரணம் என்ன தெரியுமா…?

பிரபல நகைச்சுவை நடிகர் கணேஷ்கரை போக்குவரத்து பொலிசார் தேடி வருகின்றனர். சாலையில் உள்ள தடுப்பில் காரை மோதி விட்டு தப்பி சென்றதாக கூறப்படும் சம்பவத்தில் அவர் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார். சிவா, கோவில், படிக்காதவன், அரண்மனை, மோகினி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் கணேஷ்கர். இவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் ஆவார்.

நேற்று இரவு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் கட்டுப்பாட்டை இழந்து கணேஷ்கரின் காரில் மோதி கீழே விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கணேஷ்கர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது. கணேஷ்கர் வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி ஆர்த்தி பொலிசாரிடம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் அவரை விடிய விடிய மருத்துவமனைகளில் தேடி அலைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *