தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன்.நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்தார். இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சூது கவ்வும் படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்தொழில் உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது
அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான்.வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள்.