பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்தவரா இது? இப்போ என்ன செய்கிறார்..எப்படி இருக்கிறார் பாருங்க…!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் மகா, மெகா ஹிட் ஆன படங்களில் ஒன்று பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் என உச்ச நட்சத்திரங்கள் நடித்த பாட்ஷா படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது.

சாதாரண ஆட்டோ ஓட்டுனராகவும், அதன் பின்னணியில் பெரிய தாதாவாகவும் இதில் மிரட்டியிருப்பார் ரஜினிகாந்த். வில்லன் கேரக்டர் செய்த ரகுவரனின் ஆண்டனி கதாபாத்திரம் இப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறது.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தவரின் நிஜப்பெயர் சஷிகுமார். பெரிய லெவலில் ஹிட்டான படத்தில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது ரஜினியின் தம்பியாக பாட்ஷா படத்தில் நடித்த சஷிகுமாரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *