பல கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்…! அடேங்கப்பா இத்தனை கோடியா …? விலையைக் கேட்டால் தலையே சுத்துதே…!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியது திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்து பிரம்மாண்ட சொகுசு காரை ரகுல் ப்ரீத் சிங் வாங்கி உள்ளார். தமிழில் வரும் தீபாவளிக்கு ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாகவிருக்கிறது.சமீப காலமாக பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் மெர்சிடஸ் கார் ஒன்றை தற்போது புதிதாக வாங்கி இறக்கி இருக்கிறார்.3.5 கோடிக்கு சொகுசு கார்: அயலான் படத்தைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியில் ஓடிடி படைப்புகளில்

அதிக ஆர்வம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் டாப் ஹீரோயினாக இல்லாத போதும் 3.5 கோடிக்கு  பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். 7ஜி ரெயின்போ காலணி கன்னட ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் படங்கள் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் தீரன்,

கௌதம் கார்த்தியுடன் என்னமோ ஏதோ, சூர்யாவுடன் NGK போன்ற படங்கள் நடித்துள்ளார். அதேபோல் தமிழில் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் பிஸியாக் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது Mercedes-Benz Maybach GLS ஆடம்பர சொகுசு கார் ஒன்றினை வாங்கி உள்ளார். இந்தக் காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடியாகும். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *