மலையாள படங்களில் நடித்து வந்த அணு இமானுவேல், 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் மலையாள திரையுலகில் 2011-ஆம் ஆண்டு ஸ்வப்னா சஞ்சரி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் 2016-ஆம் ஆண்டு ஆக்ஷன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அணு இம்மானுவல் தமிழில் 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் துப்பறிவாளன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு பின்னர் இவரை தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அணு இமானுவேல்,
நான் சினிமாவிற்கு வந்த ஆர்மபத்தில் பல பேர் என்னிடம் தவறாக அணுகினார்கள். சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர். ஆனால் நான் இதை கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன். இந்த மாதிரியான சமயத்தில் நாம் தனியாக சமாளிப்பதை விட குடும்பத்தின் துணையுடன் சமாளிப்பது நல்லது என்று அணு இமானுவேல் கூறியுள்ளார்.