டிக் டாக் மூலம் பிரபலமான மிர்னாளினி ரவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நடிகை மிர்னாளினி ரவி அவர்களிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர், அப்பொழுது அவர்நடிகர் விஜய், அஜித் இருவருமே பிடிக்கும், நடிகர் விஜய் அவர்களின் நடனம் பிடிக்கும், நடிகர் அஜித் அவர்களின் ஸ்டைல் பிடிக்கும் என்றார்.வாழ்க்கையில் எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க வேண்டு வேண்டும். எனக்கு பிடித்த உணவு பிரியாணி என்றார்,
எனக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டும் என்றால் இந்த தகுதி இருந்தால் போதும் மனம் திறந்து கூறிய நடிகை என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்க வேண்டும். சந்தோசமாக பார்த்துக் கொண்டால் போதும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் அவர் நடித்த எனிமி திரைப்பட டும் டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். நடிகையின் நடனத்தை கண்ட மாணவர்கள் விசில் பறக்க ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து செல்பி எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது, இதனை எடுத்து அந்த பகுதியில் இருந்து அவசர அவசரமாக நடிகை புறப்பட்டு சென்றார். மிர்னாளினி ரவி தமிழில் எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிர்னாலினி ரவி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சியை படம் எடுக்க போவதாக சொன்னாலே பதட்டமாகிவிடும்.இருப்பினும் அதை நினைந்து பயந்து வருத்தப்பட்டு வந்தால் ஒரு பலனும் இல்லை. அந்த பயத்தில் இருந்து வெளியே வந்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதை பக்குவமாக செய்து முடிக்க தயாராகி விடுவேன்.படுக்கையறை, நெருக்கமான காட்சியில் நடிக்க தயக்கம் இருந்தாலும், முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் அந்தக் காட்சிகளுக்கு மனதளவில் தயாராகி விடுவேன் என்று மிர்னாலினி ரவி கூறியுள்ளார்.