நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணத்திற்கான காரணம் குறித்து சிறைவாசி ஒருவர் பல அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளார். திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் கால்பதித்து இன்று மக்களின் மனதில் ஒரு செல்ல பிள்ளையாக குடிபெயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு ரசிகர்களை இடைவிடாமல் அசத்தி வருகிறார்.
இவரின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி என்பது யாவரும் தெரிந்ததே. இந்நிலையில் இவரின் மரணத்துக்கு யார் காரணம் என்பது குறித்து சிறைவாசி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், ஜெயில் Superintendent தாஸ் ஒரு அற்புதமான, அன்பான மனிதர். பொதுவாகவே Jail Superintendent என்றால் ஊழல், நியாயமில்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் மத்தியிலும் ஒரு நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர். அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு தான் தாஸ்.
சிறைவாசிகளுக்கு எதாவது ஒரு பிரச்னை என்றால் அவர் தான் முதலில் நிற்பார். குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் கூட அவருடைய சொந்த காசில் வாங்கி கொடுப்பார். அந்த அளவிற்கு சிறைவாசிகளின் அவர் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். இந்நிலையில் சந்தன மரக்கடத்தல் வழக்கில் வீரப்பன் கைது செய்தபோது திருச்சி சிறையில் தாஸ் உயர் அதிகாரியாக இருந்தார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம் ஏற்பட்டவுடன் கோபால் மற்றும் அவரது சகோதர சகோதரிகள் மீதும் கொலை மற்றும் கடத்தல் வழக்கு போடப்பட்டது.
அந்த சமயத்தில் தாஸ் கோயம்புத்தூர் சிறைக்கு மாற்றம் செய்தபோது சிறையில் இவர் நேர்மையை கண்டு அங்கு இருக்கும் பிற அதிகாரிகள் கொடுத்த டார்ச்சலினால் மனநிம்மதி இல்லாமல் இருந்தார். இந்நிலையில் ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக தாஸ் உயிரிழந்தார். அங்க இருந்த அதிகாரிகளின் கொடுத்த தொல்லை மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தாஸ் இறந்ததாக கூறியுள்ளார்.