திருமணத்துக்கு பின்பும் இப்படியா…! சிக்பேக் காமித்து ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் …!

பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார். அதன்பின் விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகினார். இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார். உடல் எடையை ஏற்றி அதன்பின் மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹன்சிகா தற்போது இயக்குனர் இகோர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.’ஹன்சிகா 51′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா கிளாமர் போட்டோஷூட்டினையும் விடவில்லை.தற்போது சிக்ஸ்பேக் காமித்தபடி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஹன்சிகா.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *