திருடர்களுக்கு ஆதரவளிப்பதா…? ரஜினியை விளாசிய ரோஜா…! ரோஜாவின் பரபரப்பு பேட்டி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது …!

சந்திரபாபு நாயுடு கைதான பிறகு அதற்கு நடிகர் ரஜினி அவரது மகன் லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அதற்கு நடிகை ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கைது கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்த போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவின் பொது வாழ்க்கை, வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை வழங்கவும், மருந்து மாத்திரைகளை அனுமதிக்கவும்,

சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதுபோல சந்திரபாபு நாயுடுவும் தனக்கு ஜாமின் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் வருகிற 19-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. ரோஜா எதிர்ப்பு இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கண்டு பேசினார்.தற்போது இதற்கு ஆந்திர மாநில சுற்றுசூழல் துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் ரஜினியின் மரியாதைதான் குறையும் என்றும்

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எண்ணியதால்தான்  ரஜினி அரசியலுக்கு வரவில்லை என குற்றம்சாட்டிய ரோஜா, மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும், ஆனால் திருடர்களுக்கு ரஜினி ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.சந்திரபாபு நாயுடு நல்லவர் என்று அவர் சொன்னால் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என சுட்டிக்காட்டி, ரஜினி ஒரு புத்திசாலி என்றும் ஆனால் மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? என வினவிய ரோஜா, இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *