திடீரென வேகமெடுக்கும் கமலின் தக் லைஃப்.. ஒரு சீன் இருக்கு…! யப்பா வாவ்…! ஓபனாக சொன்ன அபிராமி…!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் இப்போது நடித்துவரும் படம் தக் லைஃப். கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் – மணிரத்னம் பல வருடங்கள் கழித்து இணைந்திருப்பதன் காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படம் பற்றி நடிகை அபிராமி ஓபனாக பேசியிருக்கிறார்.அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் இப்போது சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கிய அந்தப் படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், நண்டு ஜெகன், பாபி சிம்ஹா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.படத்தில் சிம்பு தக் லைஃப் படத்தின் இன்னொரு ஹைலைட்டாக இருக்கிறார் சிம்பு. செக்க சிவந்த வானம் படத்தில் ஒர்க் செய்த போது சிம்புவை ரொம்பவே மணிரத்னத்துக்கு பிடித்துவிட்டதால் இந்தப் படத்தில் அவருடன் வேலை செய்கிறார். சிம்புவின் கேரக்டர் தொடர்பான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது. நிச்சயம் இதில் சிம்பு மிகப்பெரிய ரோல் செய்திருப்பார் என்று எஸ்டிஆர் ரசிகர்களும் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். சிம்புவும் பல காட்சிகளை சிங்கிள் டேக்கில் முடிப்பதாகவும் கூறப்படுகிறது. தனக்கான டப்பிங் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்.

கமல், சிம்பு தவிர்த்து படத்தில் திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். விருமாண்டி படத்தில் நடித்தபோது கமலுக்கும், அபிராமிக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. எனவே இப்படத்திலும் அதனை எதிர்பார்க்கலாம்.ஒரு லெஜெண்ட். அவரிடமிருந்து மற்ற இயக்குநர்கள் கற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். அதேபோல் மணிரத்னமும் ஒரு லெஜெண்ட். தக் லைஃபில் தன்னை மணிரத்னத்திடம் கமல் ஹாசன் எப்படி ஒப்படைக்கிறார் என்பதை பார்க்கவே அழகாக இருக்கும். முக்கியமாக மணி சார் படத்தில்

ஒரு சீன் என்றால் அந்த சீனீல் எதாவது ஆக்டிவிட்டி நடந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்திலும் ஒரு சீன் இருக்கிறது. அதாவது ஒரு ஹை மொமண்ட்டில் நான் கிச்சனில் இருக்கும்படியான சீன் அது. அந்த சீனில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும், மிக்ஸியை ஆன் செய்ய வேண்டும், டயலாக் பேச வேண்டும். என்னை இரண்டு கேமராக்கள் ஃபாலோ செய்யும். மார்க்கை விடக்கூடாது, டயலாக்கை மறக்கக்கூடாது, கண்ட்டினியுட்டி மிஸ் ஆகக்கூடாது. அய்யோ அதை நினைத்தாலே ஜஸ்ட் வாவ் என்றுதான் சொல்ல தோன்றுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *