தலைகீழாக ஒர்கவுட்…! தீவிரமான உடற்பயிற்சியில் ஜோதிகா…! வெறித்தனமாக தான் ஒர்கவுட் வைரலாகும் வீடியோ…!

வெறித்தனமாக தான் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து ரசிகர்களை மெர்சலாக்கி வரும் ஜோதிகா.சமீபகாலமாக நடிகைகளின் ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. கீர்த்திசுரேஷ் , சமந்தா, என தற்போது இவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இந்த ஒர்க் அவுட் லிஸ்டில் நடிகை ஜோதிகாவும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் அடுத்தடுத்து வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில், அன்று முதல் இன்று வரை நடிகை ஜோதிகாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இன்றும் பலரின் கனவுக் கன்னியாக வளம் வரும் ஜோதிகா, கொழு கொலு உடலுக்கும், துரு துரு நடிப்பிற்கும் பெயர் போனவர்.

நீண்டநாள் காதலனான நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிற்கு பிரேக் போட்ட ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு மாஸான ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து தனித்துவமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் ஜோ, தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது பிட்னெஸ்ஸில் குதித்துள்ள ஜோதிகா,வெறித்தனமாக தான் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து ரசிகர்களை

மெர்சலாக்கி வருகிறார். ‘ஜோ ஜோ ஜோதிகா நீ வட்டமான ஊட்டி பேரிக்கா’ என்று ஜோதிகாவிற்காகவே மாயாவி படத்தில் எழுதிய பாடல் அனைவருக்கும் நினைவிருக்கும், இனி இந்த பாடலுக்கு வேலை இருக்காதோ என்று ரசிகர்கள் என்னும் வகையில் 44 வயதிலும் டன் கணக்கில் வெயிட் லிப்ட் செய்வது, தலைகீழாக நிற்பது என இளமை பொலிவுடன் வெறித்தனமாக ஒர்கவுட் செய்து வருகிறார் ஜோ. சமீபத்தில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒர்கவுட் வீடியோ தீயாய் பரவி இணையத்தில் வைரலாகிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *