சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. இதையடுத்து சௌந்தர்யா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார். இதில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இவர் செப் 3, 2010 -ம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்தார், இவர்களுக்கு மகனாக வெட் என்பவர் பிறந்துள்ளார். பின்னர் 2016 -ம் ஆண்டு செப்டம்பர்-ல் கருத்து வேறுபாடு அடிப்படையில் விவாகரத்து நடந்தது.
பின்னர் இவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 8ல் விசாகன் வணங்காமுடி என்பவருடன் மருமணம் செய்துள்ளார். விசாகன் வணங்காமுடி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சௌந்தர்யாவிடம் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அவர், “ஷங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். அவர்களுடன் பேச நிறைய விஷயம் இருக்கிறது” என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.