தனது Daily Routine காணொலியை வெளியிட்ட நடிகை சமந்தா…! என்னெல்லாம் பண்றாங்க பாருங்க…!

நடிகை சமந்தா, சமந்தாவுடன் ஒரு நாள் என குறிப்பிட்டு தனது சமூக வளைத்த பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமகமானவர் தான் நடிகை சமந்தா.இதன் பி்ன்னர் கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென சினிமாவில் ஒரு தனித்துவமான பாணியையே உருவாக்கிக்கொண்டார்.தொடர்ந்து பல மொழிகளிலும் இவரு்கு பட வாய்ப்புகள் குவிந்தது.அதனிடையே டோலிவுட் நடிகர் நாக சைதன்யானை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

அதன் பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துவிட்டு முழுநேரத்தையும் தனது சிகிச்சைகாக செலவிட்டடார். சிகிச்சையின் பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என தன்னை தானே மீட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் களமிறங்கினார்.நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும்

நடிகை சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றும் மீண்டும் சமந்தா பற்றிய செய்திகள் இணையத்தில் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது. தனது தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் அனைத்து கடினமான சூழ்நிலைகளையும் புன்னகையுடன் கையாளும் சமந்தா பல பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறிவருகின்றார்.இந்நிலையில் சமந்தாவுடன் ஒரு நாள் என அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் காணொளி தற்போது இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகயும் அள்ளிவருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *