தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக நடித்து வருபவர், ரம்யா கிருஷ்ணன். இவர், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நயன்தாரா நடித்திருந்த ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு பிறகு இவர் டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிளாக் காமெடி, கொலை, கடத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குபவர் நெல்சன். இளம் இயக்குநர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த்.
கடந்த ஆண்டு நெல்சனுக்கும் அந்த வாய்ப்பினை கொடுத்தார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் காமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். படம், இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பாகுபலி படத்தில் ‘ராஜமாதா’வாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.
இந்த படத்திற்கு பிறகுதான் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல..’ என டைலாக் பேசிய இவர், அப்படத்தில் அவருடன் சேர முடியாமல் தவிக்கும் வில்லியாக நடித்திருப்பார். கடைசியில் ரஜினியுடன் சேர அவருக்கு ஜெயிலர் படத்தில்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்னனுக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கிளில் பேசிக்கொள்கின்றனர்.