சில்க் ஸ்மிதா என்னை ஓங்கி அடிச்சா இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்…! நடிகை ஷகிலா சொன்ன அதிர்ச்சித் தகவல்…!

தமிழ் சினிமாவில் 70,80 களில் ஐட்டம் சாங் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பிரபல்யமானவர் சில்க் ஸ்மிதா.நடனம் ஆடியது மட்டுமல்லாது சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து உள்ளார்.சில்க் ஸ்மிதா இறந்து விட்டார் எனத்தெரிந்ததும் மிகவும் சந்தோசப்பட்டேன் என அதிர்ச்சித் தகவலை சொல்லியிருக்கிறார் நடிகை ஷகிலா. சில்க் ஸ்மிதா உடல் மறைந்தாலும் நினைவுகளால் வாழ்பவர்கள் சிலரே அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் சில்க் ஸ்மிதாவிற்கு தனியிடமே உண்டு. ஆந்திர மாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் பிறந்தது ஆந்திரப் பிரதேச மாநிலம் என்றாலும் பூர்வீகம் கரூர் ஆகும்.

வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு தான் இவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயர் வந்தது. பல திரைப்படங்களில் நடித்த இவர், பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். இப்படி பலரையும் கண்களால் கவரப்பட்ட சில்க் 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக மீட்கப்பட்டார்.

இறந்தது சந்தோசம் இந்நிலையில், கவர்ச்சி நடிகையாக ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அவர் ஊடகம் ஒன்றில் பேசும் போது இவர் சில விடயங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ஷகிலாவிற்கு 18 வயது இருக்கும் போது சில்க் ஸ்மிதாவுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதையில் சில்க் ஸ்மிதா என்னை அறைய வேண்டும். சில்க் மெதுவாக அறைவேன் என்று சொல்லி விட்டு பலமாக என்னை அறைந்து விட்டார். அதேபோல், கேரளாவில் ஆபாச பட நடிகையாக இருந்தவர் ஷகிலா.

பல படங்களில் ஆபாசமாக நடித்து மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். தமிழிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான்.இதில் விதவிதமாக சமைத்துக் கொடுத்து எல்லோருக்கும் அம்மாவாக மாறினார்.மேலும் யூடியூப்பில் சர்ச்சையில் சிக்கிய பெண்களை அழைத்துவைத்து பேட்டியெடுத்து வருகிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஷகிலா ‘எனக்கு அப்போது 18 வயதுதான் இருக்கும். சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் நான் நடித்தேன்.

கதைப்படி அவர் என்னை அறைய வேண்டும். லேசாக அறைவேன் என சொல்லிவிட்டு மிகவும் வேகமாக அறைந்தார். இதனால் கோபித்துகொண்டு அப்படத்திலிருந்து வெளியேறினேன்.அவர் இறந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன். அந்த வயதில் எனக்கு அந்த பக்குவம்தான் இருந்தது. ஆனால், இப்போது என் கோபம் முட்டாள்தனமானது என புரிகிறது. அவரே இறந்துவிட்டார். அவர் மீது அன்பு இல்லை என்றாலும் வெறுப்பை வளர்க்க கூடாது என்கிற பக்குவம் வந்துவிட்டது’ என அவர் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் அந்த படத்தில் நான் நடிக்காமல் படத்திலிருந்து விலகி விட்டேன். ஆனால் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் தெரிந்ததும் நான் மிகவும் சந்தோசப்பட்டேன். அந்த வயதில் எனக்கு அவ்வளவு பக்குவம் தான் இருந்தது ஆனால் இப்போது யோசிக்கும் போது தான் தெரிகிறது அது எவ்வளவு முட்டாள் தனம் என்று இப்போது அவர் மீது எனக்கு அன்பு இல்லாவிட்டாலும் வெறுப்பு இருக்க கூடாது என்ற பக்குவத்தில் நான் இருக்கிறேன் என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *