தமன்னா மும்பையில் 1989 ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மும்பையில் தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த தமன்னா 13 வயதில் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டார். தமன்னா தனது 15 வயதில் 2005ம் ஆண்டு ‘சந்த் சா ரோஷன் செஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதே வருடம் ‘ஸ்ரீ’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டே ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அவருடைய முதல் சாதனை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று திரையுலகிலும் தடம் பதித்ததுதான். ஆனால் இந்த மூன்று படங்களுமே நன்றாக ஓடவில்லை என்றாலும் தமன்னா அடுத்த அடுத்தப் படங்களில் நடிக்க இது ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்தது.நடிகை தமன்னா முதல் படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது தனக்கு 13 வயது தான் ஆகியிருந்தது என்று கூறிய இளம் வயது தமன்னாவின் வீடியோ சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தான் நடிகை தமன்னா. இப்படத்தை அடுத்த இவர் வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னாவிடம், பள்ளிப்பருவத்தில் ப்ளூ பிலிம் பார்த்து இருக்கீங்களா? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்து நடிகை தமன்னா , ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு இருந்த CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது. உண்மையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை என்று தமன்னா கூறியுள்ளார்.