சிறுநீர் கழிக்கவே பிடிக்காது…! எனவே இதை பண்ணுவேன்…! முகம் சுழிக்க வைத்த நஸ்ரியா பேச்சு…! பரபரப்பு வைரல் வீடியோ …!

நடிகை நஸ்ரியா-வின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜா ராணி திரைப்படம் வெளியாகி இருந்த நேரம். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த திரைப்படம் இயக்குனர் அட்லிக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. தன்னுடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து இயக்குனர் அட்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அந்த சமயத்தில் படத்தின் பிரமோஷனுக்காக காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில்

நடிகை நஸ்ரியா மற்றும் இயக்குனர் அட்டில் இருவரும் கலந்து கொண்டார்கள் அதில் பல கேள்விகள் சுவாரசியமான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் பதில் அளித்தனர். ஒரு கட்டத்தில் நடிகை நஸ்ரியாவிடம் நீங்கள் மறைத்து வைத்திருக்கக்கூடிய உங்களைப் பற்றிய கேவலமான ரகசியம் ஏதாவது இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகை நஸ்ரியா என்னைப் பற்றிய கேவலமான ரகசியம் என்னவென்றால்.. எனக்கு கழிவறைக்கு செல்லவே பிடிக்காது என்று கூறினார். இதைக் கேட்ட இயக்குனர் அட்லி மற்றும் DD-யின் ரியாக்ஷன் என்ன என்பதை

இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். இதை கேட்ட அட்லி ச்சைக்.. என்று திரும்பி அமர்ந்தார். இதனை கேட்ட தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பேந்த பேந்த முழித்தார். மேலும், இதுவரை நான் கேள்விப்பட்டதிலேயே கேவலமான ரகசியம் இது தான். இந்த கேள்வி கேட்ட எனக்கே என்னை நினைத்தால் கேவலமாக இருக்கிறது என்று பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய நடிகை நஸ்ரியா அடிக்கடி பாத்ரூம் செல்வதற்கு எனக்கு பிடிக்காது. எனவேதான் நான் அதிக அளவில் தண்ணீரை குடிக்க மாட்டேன். தேவையான அளவு மட்டும் தான் தண்ணீர் குடிப்பேன் என பேசி இருக்கிறார்.இவருடைய இந்த பேச்சை நீங்கள் தவறவிட்டிருந்தால் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *