சமந்தா-விஜய்யின் நெருக்கமான ரொமான்ஸ் பார்த்து பாதியிலேயே எழுந்து போன நாக சைதன்யா…! இப்படி ஒரு நிலைமையா…?

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதற்கு முன் இருவரும் இணைந்து மகாநடி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.அதை தொடர்ந்து தற்போது குஷி திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘நா ரோஜா நுவே’ எனும் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.இதை தொடர்ந்து குஷியின் இரண்டாவது பாடல் ஆராதயா நேற்று மாலை வெளிவந்தது.

இப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா கணவன், மனைவியாக நடித்துள்ளனர். அதை காட்டும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் சமந்தா நடித்துள்ளார்.சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு திரையிடலில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நெருக்கமாக ரொமாண்டிக்காக நடித்துள்ள குஷி படத்தின் ட்ரைலர் வெளியானது. இதை பார்த்த நாக சைதன்யா அங்கு இருந்து பாதியிலேயே எழுந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *