கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த நடிகை சாரா அலிகான்…! விமான நிலையத்தில் என்ன நடந்தது…!

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் மகளாக கெடர்நாத் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை சாரா அலி கான்.இவர் இந்தித் திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்த இவர், நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். மேலும் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியுமாவார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, சாரா 2018 கேதார்நாத் மற்றும் சிம்பா போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

மேலும் கேதார்நாத் திரைப்படம் சிறந்த அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை இவருக் கு பெற்றுத் தந்தது. 2019இன் ஃபோர்ப்ஸ் இந்தியா ‘ பத்திரிக்கையின் பிரபலங்கள் 100 என்ற பட்டியலில் இவர் இடம் பெற்றார்.சாரா அலி கான் 1995 ஆகத்து 12 அன்று மும்பையில் இந்தித் திரையுலகின் நடிகர்களான மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகிய இருவரின் மகனான சைஃப் அலிகான் மற்றும் அமிர்தா சிங் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர், பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

இவர், சமூகவாதியான ருக்சனா சுல்தானாவின் தாய்வழி பேத்தி ஆவார். இவருக்கு இப்ராகிம் என்ற ஒரு தம்பி உள்ளார். இவரது மற்றொரு சகோதரர் தைமூர், கரீனா கபூருடனான இரண்டாவது திருமணத்தின் மூலம் சைஃப்பிற்கு பிறந்த மகனாவார். சாரா கான் முக்கியமாக தந்தைவழியில் பஷ்தூண் மற்றும் பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் இவரது தாய்வழியில் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். சாரா அலி கானின் அறிமுகமானது 2018 ஆம் ஆண்டில் அபிஷேக் கபூரின் காதல் படமான கேதார்நாத் என்றத் திரைப்படத்தில் இருந்தது. அதில் இவர் ஒரு முஸ்லீம் சுமை தூக்குபவரைக் காதலிக்கும்

ஒரு இந்து பெண்ணாக நடித்தார். இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுடன் கலவையான விமர்சனங்களைப் பெற்றார். இந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதும், ஆண்டின் சிறந்த பெண் நட்சத்திர அறிமுகத்திற்கான ஐஃபா விருதும் வழங்கப்பட்டது . தற்போது பாலிவுட் நடிகர் விக்கி கெளசலுடன் Zara Hatke Zara Bachke என்ற படத்தில் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் விக்கியுடன் ஜோடியாக

பல இடங்களுக்கு சென்று வருகிறார்.  இந்நிலையில் சாரா அலி கான் விமான நிலையத்தில் இருந்து பரபரப்பாக ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எங்கு சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க வந்துவிடுகிறார்கள். அதற்காகத்தான் சாரா அலி கான் ஓடியுள்ளார் என்றும் அவர் ரொம்ப சோர்வாக இருப்பார் ஓய்வெடுக்க விடுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *