கார் விபத்தில் மனைவியுடன் சிக்கிய நடிகர் ஜீவா…! நூலிழையில் உயிர்தப்பிய நடிகர் ஜீவா! உதவாமல் வீடியோ எடுத்த ரசிகர்கள்…! பதறிப் போய் விசாரிக்கும் சக நடிகர்கள் …!

சின்னசேலம் அருகில் நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜீவா. இவர் பற்றிய செய்திகள் சமீபக் காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளன. அந்த வரிசையில் நடிகர் ஜீவா, மனைவியுடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், இன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி குடும்பத்தினருடன் சென்ற போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே, திடீரென பைக் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகின்றது.இதனால் எதிர்பாராத விதமாக நடிகர் ஜீவா சென்ற கார் மற்றும் பைக் மோதி சாலையோரம் இருந்த தடுப்பை மீறி சென்றுள்ளன.

இந்த விபத்தின் போது ஜீவா, அவரின் மனைவி மற்றும் பைக் ஓட்டுநர் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *