காசு கொடுத்தா அத செய்வேன்…! நயனுக்கு அதிகரித்த பணத்தாசை…! ஜவான் படத்திற்கும் மட்டும் இப்படியா…?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் என்பதால் ஜவான் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் படம் அமையவில்லை என்று சொல்லலாம். ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் லாஜிக் இல்லாமல் மோசமாக இருந்ததாகவும். இப்படத்தின் second half மொக்கையாக இருந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜவான் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்கு நயன்தாரா பெரிய தொகையை வாங்கிக்கொண்டு இன்ஸ்டாவில் ப்ரோமோட் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள இறைவன் படத்தின் டீசர் வெளியானது. ஆனால் அதை கூட தன்னுடைய இன்ஸ்டாவில் ரிலீஸ் செய்யவில்லை. பணம் கொடுத்தால் தான் செய்வேன் என்ற ரீதியில் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷாருக்கானுடன் திருப்பதியில் ஜவான் வெற்றிக்காக சாமி வழிபாடுக்கு சென்றார். இதில் தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது. ஜவான் இன்று ரிலீஸாகி இருக்கிறது. இந்த படத்திற்கு நயன் மிகப்பெரிய தொகையை வாங்கி கொண்டு இன்ஸ்டாவில் ப்ரோமோட் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த மாத இறுதியில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த இறைவன் திரைப்படத்தின் ஒரு படத்தினை கூட தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிடவில்லை. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது கூட நயன் அதை தன்னுடைய இன்ஸ்டாவில் ரிலீஸ் செய்யவில்லை. காசு கொடுத்தா செய்வேன் என்ற ரீதியில் தவிர்த்துவிட்டதாக அதுமட்டுமல்லாமல், நயன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 20 பேரை தான் ஃபாலோ செய்கிறார். அதில் பெரும்பாலும் தன்னுடைய சக நடிகைகளே அதிகம் பேர் இருக்கிறார்கள். ஜவான் பட நாயகன் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லீ ஆகியோருடன் தன் கணவர் விக்னேஷ் சிவனையும் ஃபாலோ செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *