கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்…! வைரலாகும் புகைப்படங்களை கண்டு வாழ்த்துகள் கூறிய ரசிகர்கள் …!

பிக்பாஸ் பிரபலம் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வீட்டில் நடந்த விஷேசம் தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கணேஷ். இதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி,

உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கணேஷ். இந்நிகழ்ச்சியில் நேர்மையின் சிகரமாக இருந்த அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பைனலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் மீண்டும் தாய்மை அடைந்துள்ளதாக நிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிஷாவிற்கு தனது வீட்டில் எளிமையான முறையில் வளைகாப்பினை நடத்தியுள்ளார் கணேஷ் வெங்கட்ராமன். இதன் புகைப்படங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நடிகை நிஷா. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *