பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் நடந்து கொண்டது பிக்பாஸை கடுப்பேற்றி உள்ளது. அதே போல பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்களுக்கு அவருடைய என்ட்ரி வேறமாறி என்டர்டெயின்மென்ட்டை கொடுத்துள்ளது. கடந்த வாரம் ஷாரிக் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வாரம் சினேகன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று திருடன் – போலீஸ் என இரு டீம்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக போலீஸ் டீமிற்கு போலீஸ் யூனிஃபார்ம் வழங்கப்பட்டது.
டாஸ்க் துவங்குவதற்கு முன்பே, இது போலீஸ் உடை. கவனமாக, கண்ணியமாக கையாள வேண்டும் என பிக்பாஸ் எச்சரித்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் நடந்து கொண்டது பிக்பாஸை கடுப்பேற்றி உள்ளது. சுருதி , கருப்புக்கலர் பேண்ட் போட்டு மேலே மட்டும் யூனிஃபார்ம் சட்டை போட்டிருந்தார். ஷாரிக், சர்ட் பட்டன் போடவில்லை. பாலாஜி தொப்பியை தூக்கிக்கொண்டு தலையில் வைக்காமல் இருந்தார்.
அதே சமயம் திருடனாக இருந்த அணியினரும் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். வனிந்தாவுக்கு வழங்கப்பட்ட விருதையும் உடைத்து விட்டனர். இதனால் பதற்றத்தில் அவர் கத்தி கூச்சலிட்டு வீட்டையே இரண்டாக்கி விட்டார். போலீசே பல பொருட்களை திருடி ஒளித்து வைத்தனர். பிக்பாசின் எச்சரிக்கையையும் மீறி போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் பிக்பாஸையே கடுப்பாக்கி உள்ளது.
இதேவேளை, பூந்தமல்லி அருகே உள்ள இவிபி பிலிம் சிட்டியில் தான் பிக் பாஸ் அல்டிமேட் செட் இருக்கிறது. இந்நிலையில், அந்த செட்டிற்குள் திடீரென குரங்கு இளைப்பார வந்ததை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிபி போலீஸ் ஸ்டேஷன் என இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக் பாஸ் வீடு காவல் நிலையமாக ஒரு பகுதி மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த காவல் நிலைய செட்டுக்கு மேல் குரங்கு இறங்கி வீட்டிற்குள் வந்து சுற்றி திரிந்துள்ளது.
எனினும் குரங்குகளினால் எந்த தொல்லையும் இல்லை. வெயில் இப்பவே சற்று அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் தேடி அந்த குரங்கு வந்து சென்றிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.