ஒரே வீட்டில் லிவிங்கில் இருக்கும் விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா…? புகைப்படத்தால் பிடிபட்ட பிரபலங்கள்…!

நடிகர் விஜய்தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர். இவரைப்போல் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பிரபலாமானவர். இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் மற்றும் டியர் காமரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அந்த சமயத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தது, மேலும் இவர்கள் இருவரும் லிவிங்கில் இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சர்ச்சைகள் எதற்கும் இருவரும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வந்தது.

அதில் அவரது புகைப்படம் ஒன்றையும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் இணைத்து வைத்து வெளியிட்டுள்ளார். சினிமாவை பொறுத்தவரை நடிகை நடிகர்கள் ஒரே படத்தில் அடுத்தடுத்து நடித்து வெளியில் சுற்றினாலும் அதை ரசிகர்கள் ரியல் ஜோடிகளாகவே பேசுவார்கள்.அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலில் இருப்பதாகவும் இருவரும் ரகசியமாக அவுட்டிங் சென்று ஊர்சுற்றி வருவதாகவும் கூறப்பட்டு சில புகைப்படங்கள் வெளியானது.

இதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக தன் வீட்டில் ரெடியானப்பின் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.தற்போது அந்த புகைப்படத்தை வைத்து விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருவதை உறுதி செய்துள்ளனர். அப்படி ஆதாரமாக விஜய் தேவரகொண்டா யோகா செய்யும் போது எடுத்த புகைப்படமும் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படமும் ஒரே வீட்டில் எடுத்துள்ளது என்று ரசிகர்கள் கண்டுபிடித்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *