எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு…! அதெல்லாம் தாண்டி தான் வந்தேன்…! நடிகை ஓபன் டாக்…!

சீரியல் நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார்.மாடலிங் மூலம் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி அடுத்ததாக தட்றோம் தூக்குறோம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் Fouziee என்ற Fouzil Hidhayah.திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.அடுத்ததாக அவளும் நானும்,சிவா மனசுல சக்தி,லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.இவற்றை அடுத்து சில குறும்படங்கள் ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் நடித்தார் Fouzil Hidhayah.

சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வந்தவர் ஃபௌஸி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர், 2020 -ம் ஆண்டு வெளியான தட்றோம் தூக்குறோம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.


இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருக்கிறது. மீடியா என்பதால் ஓபன்னாக தெரிகிறது. இதை எல்லாம் தாண்டி நான் வந்து இருக்கிறேன். இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் தரம் தாழ்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *