நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் தன்னுடைய உடம்பின் தன்மை குறித்தும் தனக்கு இருக்கக்கூடிய ஹார்மோன் பிரச்சனைகள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவ்வப்போது இணைய ஊடகங்களில் பேட்டியில் கலந்து கொள்ளும் நடிகர் ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மீடியா வாழ்க்கை என அனைத்தைப் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தன்னுடைய உடலின் தன்மை குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் கூறியதாவது, சில பேருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும்.. நானெல்லாம் மோந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும். அப்படியான ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருக்கிறது.ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்.அப்படி இருக்கும் பொழுது என்னுடைய உடல் எடை கூடிவிடவே கூடாது என்பதில் நான் மிகவும் கவனமுடன் இருக்கிறேன்.
ருத்துவரை பார்க்கச் சென்றால் நீங்கள் சாப்பிடவே வேண்டாம் ஒரு உணவை முகர்ந்து பார்த்தாலே போதும் உங்களுக்கு உடல் எடையை கூடிவிடும்.. சாப்பிடவே வேண்டாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே உடல் எடை கூடி விடுவீர்கள்… உப்பி போய்விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். நான் உப்பி விடக்கூடாது என்பதற்காக என்னுடைய உணவு முறையில் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.