உனக்கு அந்த நோய் இருக்கிறதா…? என்று டெஸ்ட் எடுக்க சொன்னார்கள்…! பிரியா பவானி சங்கர் கண்ணீர் பேட்டி…!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் தன்னுடைய தாய்க்குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் சென்டர் சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டு பேசினார். ஒவ்வொரு ஆண்டும் கேன்சர் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாகவும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும்

உலக ரோஜா தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தாய் குறித்து பேசினார் பிரியா பவானி சங்கர். கடந்த வருடம் என்னுடைய தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டது. அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டதால் முற்றிலும் சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை ஊட்டினார்கள்.என்னுடைய தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்ட உடனே சீக்கிரம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் என்று அவரிடம் அடிக்கடி கூறுவேன். இங்கு வந்திருந்த நிறைய பேர்

அவர்களின் அனுபவங்களை சொன்னது மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக இருந்தது. என் அம்மாவுக்கு கேன்சர் கண்டறியப்பட்ட போது எனக்கும் அந்த நோய் இருக்கிறதா..? என்று பரிசோதனை செய்து பார்க்கச் சொன்னார்கள். கேன்சரால் என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை என்று இன்றும் மருத்துவர்களை நம்புங்கள் அவர்கள் சரி செய்வார்கள் என்றும் பிரியா பவானி சங்கர் ஊக்கமளித்தார். மேலும் தன்னுடைய தாய் பற்றி பேசும் போது மனம் உருகிய நடிகை பிரியா பவானி சங்கர் மேடையிலேயே கண்ணீர் சிந்தியது காண்போரை கலங்க செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *