நடிகை ராஷ்மிகா மந்தனா ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவரை அனைவரும் நேஷனல் கிரஷ் என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தற்போது அவரின் நடிப்பில் ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.
அண்மையில் புஷ்பா 2′ திரைப்படத்தின் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.இந்நிலையில் சமூக வளைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் ராஷ்மிகா தற்போது உச்சகட்ட கவர்சியாக ட்ரெண்டிங் ஆடையில் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
View this post on Instagram