இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்க நாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படத்தில் நடிகைகள் இவானா மற்றும் ரவீனா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகர் யோகி பாபு நடிகை ரவீனா ரவிவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதை ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் யோகி பாபு சுற்றி நடக்கும் மர்மமான ஒரு விஷயம் குறித்து கிளைமாக்ஸ் காட்சியில் தான் அது ரசிகர்களுக்கு தெரிய வரும். ஒருவரின் உடல் அமைப்பை வைத்து கிண்டல் கேலி செய்வதை தவறு என்று நிறுவும் விதமாக அந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி விஜே ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் லவ் டுடே படத்தை பார்த்த பிறகு உடனடியாக யோகி பாபுவிற்கு ஃபோன் செய்து கதறி அழுதேன்.என்ன ஆகிவிட்டது..? எதற்காக இப்படி அழுகிறீர்கள்..? என்று கேட்டார். ஒருவரின் உடலை வைத்து கேலி செய்வது மிகவும் தவறான விஷயம். பாடி ஷேமிங் என்பது பேசப்பட வேண்டிய ஒன்று. இந்த படத்தில் அவ்வளவு தெளிவாக பேசி இருக்கிறீர்கள்.
அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தது மிகப்பெரிய விஷயம். இது இன்னும் நிறைய பேசப்பட வேண்டும் இந்த காட்சியை பார்த்ததும் என்னால் அழகையை அடக்க முடியவில்லை. அருமையான நடிப்பு உங்களுடையது என பேசி இருக்கிறார். அதன் பிறகு கண்டிப்பாக இது தொடர்ந்து பேசப்பட வேண்டும் என்று கூறி நான் யோகி பாபு என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை விஜே ரம்யா.