இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா…? கிண்டல் செய்தவர்களுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி…!

நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் உடல் எடை கூடி குண்டாக காணப்பட்டார். குண்டாக இருந்த பொழுது நடிகர் கௌதம் கார்த்திக் உடன் திருமணம் நடைபெற்றது.நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமணத்தின்போது உடன் இருந்தவர்களே மஞ்சிமா மோகனின் காது பட உருவ கேலி செய்தனர். 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக்கை காதலித்து ஆசை ஆசையாய் கரம் பிடித்த மஞ்சிமா மோகனுக்கு, தன்னுடைய உடல் எடையை வைத்து கிண்டல் செய்வது சுத்தமாகவே பிடிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக்கிற்கும் அந்த எண்ணம் வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. தன்னைக் கேலி கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் மஞ்சிமா மோகன் அதிரடியாக 14 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இப்போது சிக்குனு சிறுத்தை குட்டி போல் இருக்கும் மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.அந்த அளவிற்கு இந்த புகைப்படத்தில் டாப் மற்றும் ஜீன்ஸ் உடன் தன்னுடைய இடையழகை காண்பித்திருக்கிறார். மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில், சமூக வலைதளங்களில் மட்டும் நான் உருவ கேலிக்கு ஆளாகவில்லை.

முன்பாக இதற்கு முன்பு குண்டாக இருந்தபோது நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது.பலரும் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டனர்.இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.உடல் எடை குறைத்து புடவை சகிதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சிமா மோகனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *