ஆத்திரத்தில் ரசிகர்கள் மீது ஒலிவாங்கியை வீசிய பிரபல பாடகி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார்.அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார்.கடந்த 30 ஆம் திகதி குறித்த பாடகியின் இசைக் கச்சேரி இடம்பெற்றுள்ளது. இவ் இசைக் கச்சேரியில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் அங்கிருந்த ஒருவர் கார்டி பியின் மீது குளிர் பானத்தை வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தன் கையில் வைத்திருந்த ஒலிவாங்கியை குறித்த நபர் இருந்த பகுதியை நோக்கி வீசியுள்ளார்.

இதையடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாவலர்கள் குளிர்பானத்தை வீசியவர்களைத் தனியாக அழைத்துச் சென்று விட்டனர். அமெரிக்காவின் வேல்சில் கடந்த மாதம் நடந்த கார்டியின் கச்சேரியில் அவர் மீது ரசிகர்கள் பூங்கொத்தை வீசி எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது ரசிகர்களின் அருகே வந்து பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார்.இதையடுத்து, பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களைச் சுற்றி வளைத்தனர்.

அதன்பின் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது கும்பலாகச் சேர்ந்து இளைஞர்கள் தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் வேல்சில் நடந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *