அழகு கூடிட்டே போகுது…! முன்னழகு தெரிய வலிமை நாயகியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி காலா மற்றும் வலிமை ஆகிய படங்களின் மூலாமக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.பாலிவுட் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர்.2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.அதையடுத்து அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தார்.இவர் புது டெல்லியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்த இவர், பல நாடகத் திரைப்படங்களில் நடித்து, பின்னர் மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளார். சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார். குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.

குறிப்பாக சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் படைப்பின் முதன்மை மாந்தராக நடித்தார். படத்தில் அவரின் ஆக்‌ஷன் காட்சி ஒன்று சிலாகிக்கப்பட்டது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது அவர் புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *