அமலா பாலோடு முத்தக்காட்சி…! 20 முறை பண்ணுனேன்…! பிரபல நடிகர் பளீச்..!

அமலா பாலோடு முத்தக் காட்சியை 20 முறை செய்ததாக நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார். அமலா பால் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது பெரிதளவு இவருக்கு வெற்றியை தரவில்லை.பின்னர் ‘ மைனா ‘ படத்தில் நடித்தார் அதில் அவரது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.மைனா படத்தில் அமலா பாலுடன் முத்தக்காட்சி குறித்து பகிர்ந்த விதார்த்: நடிகை அமலா பால் மற்றும் விதார்த் இணைந்து நடித்திருந்த மைனா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. அமலா பாலின் மார்க்கெட்டையும் தென்னிந்திய அளவில் இந்தப் படம் உயர்த்தியது.

அப்பாவி கிராமத்து பெண்ணாக, விதார்த்தை காதலித்து, அவருடன் வீட்டை விட்டு வெளியில் வந்து, இறுதியில் இறந்துப் போகும் கேரக்டரில் நடித்திருந்தார் அமலா பால். இந்த படத்தில் அவரது மைனா கேரக்டர், ரசிகர்களின் அனுதாபத்தை வெகுவாக பெற்றது.படத்தில் அவரது குறுகுறு பார்வையும் வெள்ளந்தியான பேச்சும் நாயகனை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கட்டிப் போட்டது. இந்தப் படத்தின்மூலம் விதார்த் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். இவரும் முதல் படம் போல இல்லாமல் தேர்ந்த நடிகரை போல தன்னுடைய நடிப்பை வழங்கியிருந்தார். ஆனாலும் சூட்டிங்கின்போது சில காட்சிகளில் நடிக்க தான் திணறியது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் நீடிக்காமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். இவர் நடித்த மைனா படம் நடிகர் விதார்த்திற்கு முதல் படமாகும்.இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், மைனா படத்தில் ஒரு பாடலில் அமலா பாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி இருந்தது. அப்போது பயந்தேன். இதனால் 20 முறை எடுத்தும் அந்த காட்சி சரியாக வரவில்லை. பிறகு கேமிராவை  ஆஃப் செய்துவிட்டு இதற்காக பயிற்சி கொடுத்து படமாக்கியதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *