அப்புறம் என்ன ம**க்கு நீ இத்தனை வருஷம் இருக்கணும்…? காமெடி நடிகரை விளாசும் ஜாங்கிரி மதுமிதா…!

பிரபல சீரியல் நடிகை மதுமிதா தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகருடன் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.ஜாங்கிரி மதுமிதா ( Jangiri Madhumitha ) : தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகைகள் என்ற ஒரு பட்டியல் எடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்குத்தான் காமெடி நடிகைகள் தங்களுடைய ஈடுபாட்டை காட்டுகிறார்கள். காமெடி நடிகையாக பயணித்த சில நடிகைகள் பிற்காலத்தில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அந்த வகையில், நடிகைகள் மனோரமா மற்றும் கோவை சரளா ஆகியோர் இளம் வயதில் காமெடி நடிகையாக நடித்து அதன் பிறகு குணச்சித்திர நடிகையாகவும் வெளியேறி வருகிறார்கள்.

ஆனாலும் கூட காமெடி நடிகைகளுக்கு வருமானம் என்பது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் நான்கைந்து படங்களில் ஹீரோயினாக நடித்த போதும் என்ற போக்கில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் அதற்கேற்றார் போல் சம்பளத்தை மட்டும் கொடுத்து விட்டால் போதும் என்று பல நடிகைகள் தங்களுடைய ரூட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.சமீபத்தில் காமெடி நடிகையாக அறியப்பட்ட நடிகை ஜாங்கிரி மதுமிதா நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில்

ஜாங்கிரி மதுமிதா-வாக பிரபலமானவர். கவுண்டரின் காமெடி வசனம் ஒன்றிற்கு நடிகை மதுமிதா மற்றும் நகர் பாலசரவணன் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மதுமிதா இதனை பகிர்ந்துள்ளார். சீரியல், சினிமா என பிசியாக நடித்து வரும் நடிகை மதுமிதா-வின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா காரணமே தெரியாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு மர்மமான முறையில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *