அப்படியே பொம்மை போல் மாறிய நடிகை…! திடீரென குஷ்புவிற்கு என்னாச்சு…? பதறும் ரசிகர்கள்…!

குஷ்பு தற்பொழுது புதிய லுக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 90ஸ் களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர், ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். பின்னர் இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,

இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து கலக்கிவந்தார். இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார், மேலும், அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். ஹேர் கட் இந்நிலையில், இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திடீரென ஷார்ட் ஹேர் வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், குஷ்புவின் தலைமுடிக்கு என்ன ஆகிடுச்சு என்றும் புதிய படத்துக்கா

இந்த லுக் என்றும் ரசிகர்கள் மற்றும் நடிகைகள் கமெண்ட் பக்கத்தில் விசாரித்து வருகின்றனர்.குஷ்பு ஹேர் கட் பண்ணிட்டாரா என பலரும் வியப்புடன் பார்த்து வந்தாலும், அவர் இருக்கும் இடம் ஒரு விக் ஷாப் போல தெரிவதால், குஷ்பு சலூனில் இல்லை என்றும் ஹேர் கட் பண்ணாமல் விக் வைத்து இந்த லுக்கிற்கு மாறியிருக்கிறாரா என்கிற சந்தேகங்களையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். மேலும், இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *