தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஹனி ரோஸ். இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த கடந்த ஜனவரி மாதம் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார். சமீபகாலமாக ஹனி ரோஸ் குண்டாக இருப்பதால் அவரை சிலர் சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்து வருகின்றனர். மேலும் சிலர், ஹனி இடுப்பு பகுதி பெரிதாக இருக்க அறுவை சிகிச்சை செய்ததாக கூறிவந்தனர்.தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஹனி ரோஸ் அழகின் ரகசியம் அறுவை சிகிச்சைகள் தான் என்று சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். தற்போது அந்த விமர்சனங்களுக்கு ஹனி ரோஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து ஹனி ரோஸ் அளித்த பேட்டியில் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி என் அழகை பராமரிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ந்நிலையில் இது குறித்து பேசிய ஹனி ரோஸ்,
நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. நான் வெறும் உடற்பயிற்சி செய்து தான் என்னுடைய அழகை மெருகூட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார். நான் எந்த அழகு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. கடவுள் தந்த அழகை தவிர என்னிடம் எதுவும் இல்லை. அழகைப் பராமரிக்க சில பவுடர்களை பயன்படுத்துகிறேன். இவை அனைத்தும் கண்டிப்பாக தேவை. நடிகையாக இருந்து, கிளாமர் துறையில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. நம் உடலைப் பராமரிப்பது பெரிய விஷயம். நம் உடலை அழகாய் படைப்பது கடவுளே’ என கூறினார்.