தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்தோனே வெற்றி வாகை சூடியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மேதா ரகுநாத். முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் சமீபத்தில் வெளியான Good Night படத்திலும் தனது கியூட் நடிப்பை காட்டியுள்ளார். மாடல் உலகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.அடுத்து அவர் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. வெறும் இரண்டே படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்த நடிகை மேதா ரகுநாத்
தனது அம்மா அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்களா நடிகை மேதா ரகுநாத்தின் அப்பா அம்மாவா என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மீரா ரகுநாத். OTT யில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்தை அடுத்து மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா ரகுநாத், பெண்களுக்கு முடி நேராக மினுமினுப்பாக இருந்தால் அழுக்கு என்று பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முடி நேராக இருந்தாலும், சுருள் சுருளாக இருந்தாலும் அது அழகு தான் என்று வெளிப்படையாக மீரா ரகுநாத் கூறியுள்ளார்.