நடிகர் அருண் விஜய்யின் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று கூடி ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் பயணிக்கும் மூத்த நடிகர் தான் விஜயகுமார். இவரின் இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டனர்.இவர்களில் அருண் விஜய் மற்றும் வனிமா இருவரும் இயன்றளவு பட வாய்ப்புகளை தேடி நடித்து வருகிறார்கள்.
விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார், சினிமாத்துறை பக்கமே வராமல் வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்து வருகிறார். அவரின் ஆசை மகள் திவ்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.இந்த நிலையில் அனிதா விஜயகுமார் அவருடைய குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளார். இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன்,“ நான் இந்தியாவில் இருந்து சென்றதால், என்னால் பழக்க வழங்கங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இந்த வருடம் சென்னையில் என்னுடைய அழகான குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி மகிழ்ந்துள்ளேன்..” என குறிப்பிட்டுள்ளார்.அனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்களில் அருண் விஜயின் மகள் பூர்வியின் லேட்டஸ்ட் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது.மேலும், எளிமையான சுடிதாரில், ஃப்ரீ ஹேர் ஸ்டைலில், பார்ப்பதற்கு அப்படியே ஹீரோயின் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.