விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி என்ற திவ்யதர்ஷினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழங்காலில் அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில், என்ன நடந்தது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு நடந்தது என்ன என்பது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்த் தொலைக் காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்ய தர்ஷினி. டிடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர், பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை தொகுப்பாளனியாக இருக்கும் அவர் விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப் பிரபலமானார்,
அது மட்டும் அல்லாமல் பல விஜய் டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், திரைப்பட பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.கமலஹாசனின் நள தமயந்தி, விசில் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் டிடி நடித்திருக்கிறார். தொடர்ந்து திரை துறையிலும் சின்னத்திரையிலும் பயணித்து வரும் டிடி கடந்த சில நாட்களாக எந்தவித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு முழங்காலில் பல நாட்களாக பிரச்சனை இருப்பதாகவும், அதை கவனிக்காமல் விட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக டிடி எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை டிடி பதிவிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் இதன் காரணமாகவே தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடி,”கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தேன், ஆம் நான் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன், இது எனது 4வது அறுவை சிகிச்சை எனது வலது முழங்காலில் 10 வருடங்கள் கடந்துவிட்டது.எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன்.
நான் என் முழங்காலையும் மிகவும் கடினமாக உழைக்கிறேன். 2 மாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திரையில் என்னை நேசிப்பவர்களுக்காகவும், எப்போதும் என்னை ஆதரித்தவர்களுக்காகவும், என் வலியைப் புரிந்துகொண்டவர்களுக்காகவும் இந்தப் பதிவை இடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த நிபந்தனையற்ற அன்பைப் பெற நான் என்ன செய்தேன் என்று நினைத்து நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன்.
View this post on Instagram