அசல் பொம்பை போல் ஆடி வியக்க வைத்த சிறிதர் மாஸ்டர் மகள்…! சமூக வலைத்தளங்களில் குவியும் Likes…!

அசல் பொம்பை போல் ஆடி வியக்க வைத்த ஸ்ரீதர் மாஸ்டர் மகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சமூக வலைத்தளத்தை திறமையை வெளிகாட்டும் தளமாக பயன்படுத்தி நிறைய இளைஞர்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பெயர் பெற்ற டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் தான் ஸ்ரீதர் மாஸ்டர். இவர் ஒரு நடனபள்ளி நடத்தி வருகிறார்.

அங்கு வரும் மாணவர்களை வைத்து சமூக வலைத்தளங்களில் டான்ஸ் ஆடி பல வீடியோக்களை பதிவேற்றுவது வழக்கம். இப்படியொரு நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வேஷ்டி சட்டையில் மகள்-அக்ஷதா ஸ்ரீதருடன் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.அதில் மாஸ்டரின் நடனத்தை விட அவர் அக்ஷதா ஸ்ரீதர் கொடுக்கும் ரியாக்ஷன் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

பார்ப்பதற்கு அசல் பொம்பை போலவே கொடுக்கும் ரியாக்ஷன் பலரை வியக்க வைத்துள்ளது.இவர் சிறிதர் மாஸ்டருடன் இணைந்து பல பேட்டிகள் கொடுத்துள்ளார். அக்ஷதா ஸ்ரீதரின் இந்த முயற்சி கண்டிப்பாக இணையத்தில் நல்லதொரு வரவேற்பை பெறும் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் அக்ஷதா ஸ்ரீதர் MBBS படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *