நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான, மோனிகாவை திருமணம் செய்ய உள்ள தகவலை, அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு நிலையில், தற்போது மோனிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபலமாகி பின் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருவபவர் நடிகர் கவின். இவர் தற்போது மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார்.விஜய் டிவி தொலைக்காட்சியில், கனாக்காணும் காலங்கள் சீரியல் மூலம் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் படிப்படியாக தன்னை தானே செதுக்கி கொண்டவர் கவின். அடுத்தடுத்து சில சீரியல்களில் நடித்தாலும், கவினுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால்… அது, சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் தான்.
அதிலும் இந்த சீரியலில் இவரின் காமெடியான பேச்சு மற்றும் நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால் கவினின் ஆசை, வெள்ளித்திரையில் நடிகராக வேண்டும் என்பது தான், பீசா உள்ளிட்ட பல படங்களில், குட்டி குட்டி ரோலில் நடித்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புக்காக உதவி இயக்குனராகவும் சில காலம் பணியாற்றினார். இவர் ஹீரோவாக நடித்த ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்கிற படம் தோல்வியை சந்தித்த நிலையில்… பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.ஆரம்பத்தில் கவினுக்கு எதிர்மறையான விமர்சனங்களே குவிந்த நிலையில், பின்னர் அவரின் விட்டு கொடுக்கும் குணம் மற்றும்
நல்ல மனசு இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது. ஒருவேளை லாஸ்லியாவுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறாமல் இவர் இருந்திருந்தால், முகேனுக்கு பதில் இவர் தான் டைட்டில் படத்தை பெற்றிருப்பார் என பலர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆம், தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை வருகிற 20ஆம் தேடி கவின் திருமணம் செய்துகொள்ள போகிறார். அவருடைய சில புகைப்படங்கள் கூட ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து வைரலானது. இந்நிலையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவினின் வருங்கால மனைவி மோனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ வெளியாகியுள்ளது.
Kavin’s Bride Monica David❤️ pic.twitter.com/9znVhFsKar
— Viral Briyani (@Mysteri13472103) August 2, 2023