பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வரும் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தினை தொடர்ந்து தன்னுடைய அடுத்த பட பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள ஷாருக்கான் அங்கு எதிர்பாராத விதமாக அண்மையில் விபத்தில் சிக்கினார்.மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் தற்பொழுது அவர் இந்தியா திரும்பியுள்ளார்.இந்த நிலையில் ஷாருக்கான் பற்றிய புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது ஷாருக்கான் தனது வீட்டிற்கு காட்டும் கரண்ட் பில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஷாருக்கான் தனது வீட்டிற்கு ரூ. 45 லட்சம் வரை கரண்ட் பில் கட்டி வருகிறாராம். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அனைவரும் செம ஷாக்கில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.