தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர்.இவர் தனது நடிப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த தொடருக்கு பின்பு தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு ‘மேயாத மான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படம் வெற்றி பெற விட்டாலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து வெள்ளி திரையில் பல திரைப்படங்களின் நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.இது போன்ற நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.இதற்கிடையில் எஸ்ஜே சூர்யாவுடன் இரண்டு முறை நடித்து போர் அடித்ததால் இப்போது கருநாகத்துடன் அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட்டாகி இருக்கிறார்.
கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக விஷாலை கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கரை கதாநாயகியாகவும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. சில வருடங்களாகவே பணமோசடி, இயக்குனருடன் தகராறு, உடல் நலக்குறைவு என விஷாலுக்கு போதாத காலமாக இருக்கிறது. இதனால் வேற எந்த வம்புக்கும் போகாமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று, விஷால் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்காக இவருடைய மேனேஜரை கூட மாற்றி விட்டார். இச்செய்தி நடிகை பிரியா பவானி சங்கரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.மேலும் பிரபல கவர்ச்சி நடிகை பல பேர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் அளித்தார். அந்த லிஸ்டில் விஷாலையும் அனகோண்டா எனக் குறிப்பிட்டு அவருடைய பெயரையும் பட்டியலில் சேர்த்து விட்டார்.
இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் விஷால் மறுபடியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதிலும் முதல்முறையாக பிரியா பவானி சங்கர் உடன் விஷால் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே விஷாலின் தாமிரபரணி, பூஜை போன்ற இரண்டு படங்களை ஹரி இயக்கியிருக்கும் நிலையில், 3வது முறையாக விஷாலுடன் இணைந்திருக்கிறார்.