பிக்பாஸ் ரக்சிதா தனது கணவன் ஆபசமாக மெசேஜ்களை அனுப்பி மிரட்டிய சம்பவத்தையடுத்து அவர் ஒரு முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். தொல்லைக் கொடுத்த கணவன் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் தான் ரக்சிதா மகாலட்சுமி – தினேஷ்.திருமணத்தின் பிறகு சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெறாமல் பிரிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் ரக்சிதா தனது கணவன் தினேஷ் கடந்த சில காலமாக தன் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ்களை அனுப்பி மிரட்டி வருவதாகவும் நேற்று இரவு மாங்காடு
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கணவர் தினேஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்திய போது “ரச்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார் தினேஷ்.இந்தப் புகாரில் ரக்சிதாவை விசாரித்து வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள் காவல்துறையினர். இதன் பின்னர் ரக்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு ஸ்டோரியைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது புகைப்படத்தை வெளியிட்டு கண்ணாடி உடைந்து துகல்களாக இருக்கும் புகைப்படத்தில் ஸ்ரோங்காக இருப்பது மட்டும் தான் ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் இனி கணவனுடன் சேர்ந்து வாழப் போவதில்லை என முடிவெடுத்து விட்டார் போல மேலும், இதற்கு முன்னர் கணவனுடன் சேர்ந்து வாழப் போவதில்லை என நீதிமன்றத்தில் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.