பிரபல கன்னட நடிகர் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல நடிகர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ். இவருக்கு சூரஜ் குமார் என்கிற மகன் உள்ளார். 24 வயதான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனால் இவரது பெயரை துருவன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஐராவதம், தாரக் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். இவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது ரதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விபத்து இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மைசூரில் இருந்து ஊட்டி செல்ல பைக்கில் கிளம்பியுள்ளார். அப்போது பேகுர் அருகே மைசூரு – குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது முன்னே சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவருக்கு ஒரு காலை எடுத்தால் தான் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் இவரது வலது காலை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.