தென்னந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். நடிகை அனுஷ்கா, விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்தில் நடித்து இருந்தனர். அப்போது அவரின் நடன ஸ்டைல் பற்றி பேட்டி அளித்து இருந்தார்.அவர் கூறுகையில், ‘என் ஊச்சி மண்டேலே’ பாடலின் படப்பிடிப்புக்காக அவர் செட்டுக்கு வந்தார். நான் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்படியே அமர்ந்து விஜய் பார்த்து கொண்டே இருந்தார். அவர் ஒரு நல்ல நடனக் கலைஞர் என்று எனக்குத் தெரியும். நான் இண்டஸ்ட்ரியில் ஒரு சின்ன நபர், ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம். ஷாட் ரெடியானதும் அவரது ஆற்றலும், சக்தியும் நம்பமுடியாததாக இருந்தது.
ஒரு முறை பார்த்த பிறகு அவர் எப்படி அந்த மாதிரி நடனமாடினார் என எனக்கு தெரியவில்லை. அவர் நடனமாடியதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் நடனமாடுவதை நிறுத்தினேன். அந்த இடத்தில் என்னால் நடனமாட முடியாவில்லை. ஒருவரால் எப்படி இவ்வளவு ஆற்றலுடன் நடனமாட முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன் “ என்றார். படம் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்த பாடல் செம ஹிட்டானது. அனுஷ்கா பல வருடங்களாக தமிழில் படங்களில் முடியவில்லை. தெலுங்குப் படமான பாகுபலிக்குப் பிறகு, அவர் தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்து கொண்டார். அவர் அவசரப்பட்டு படங்கள் நடிக்க விரும்பவில்லை.
படங்களைத் தேர்ந்தெடுப்பதில் அனுஷ்கா முன்பை விட கவனமாக இருக்கிறார். சமூக வலைதளங்களில் கூட ஆக்டிவாக இருப்பதில்லை. தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், முடிந்தவரை லைம்லைட்டில் இருந்து விலகியே இருக்கிறார். ஷாட் ரெடியானதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி நடனமாடினார் என்று எனக்கு தெரியவில்லை என அனுஷ்கா கூறியுள்ளார்.